தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதத்தின் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு உரிய முறையில் கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்டப்பகலில் 11 ஆண்கள், 2 பெண்கள் என சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் 40 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.