திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின அமர்வு இன்று (வியாழக்கிழமை) பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது திருக்ணேஸ்வரர் ஆலய பகுதியினை பெரும்பான்மை சமூகத்தினால் சூறையாட முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரும் பிரேரணை அனைத்து கட்சி ஆதரவுடனும் தவிசாளரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு அமைவாக அனைவரின் ஆதரவுடனும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன அத்துடன் பல்வேறு கருத்துமுரண்பாடுகளும் ஏற்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடதக்கது.