மத்திய ஒஸ்லோவில் ஓரின சேர்க்கையாளர் விடுதிக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாகிஸ்தானில் இருப்பதாகக் கருதப்படும் இரண்டாவது சந்தேக நபருக்கு சர்வதேச கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதுடைய சந்தேக நபர் அர்பான் கதீர் பாட்டி, வர் என்று வுஏ2 இன் அறிக்கையை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவர், முன் தண்டனை பெற்றவர் என டைம் ஆஃப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அவர் என்ன பங்கு வகித்தார், தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. நோர்வேயுடன் நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லாத பாகிஸ்தானில் அவர் இருப்பதாக கருதப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பு நேர்மறையானது என்றும், நாடு கடத்துவது ஒரு ‘சாத்தியம்’ என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ரேடாரில் ஏற்கனவே காட்டப்பட்டு தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கருதப்படும் 40 வயதிற்குட்பட்ட நோர்வே பிரஜை ஒரு ‘பயங்கரவாத செயலுக்கு உடந்தையாக’ இருந்ததற்காக தாங்கள் தேடுவதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பொலிசார் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
முதல் சந்தேக நபர், ஜுனியர் மாதாபூர், நகரின் பிரைட் திருவிழாவுடன் தொடர்புடைய கொண்டாட்டங்களின் போது மத்திய ஒஸ்லோவில் ஓரின சேர்க்கையாளர் விடுதிக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 54 மற்றும் 60 வயதுடைய இருவர் கொல்லப்பட்டதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
43 வயதான மாதாபூர் விரைவில் கைது செய்யப்பட்டார் என்று டைம் ஆப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஒஸ்லோவின் வருடாந்தர பிரைட் அணிவகுப்பு சனிக்கிழமையன்று ஓரின சேர்க்கையாளர் விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த மாதாபூர், 2015 ஆம் ஆண்டு முதல் நோர்வே பொலிஸ் பாதுகாப்பு சேவையின் உளவுத்துறைக்கு தெரிந்தவர். அவர் தீவிரமயமாக்கல் மற்றும் தீவிரவாத வலையமைப்பில் உறுப்பினராக இருப்பது குறித்து கவலைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.