நிதிமோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, இதற்கு முன்னர் நீண்டகாலமாகவே பல்வேறு நிதி முறைக்கேடுகளுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
1982ஆம் ஆண்டு களுத்துறையில் பிறந்த அவர், பல்வேறு ஜனரஞ்சக பிரமுகர்களிடம் இருந்து பல கோடிகளை மோசடி செய்து, அதி சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியல்வாதிகள், நடிகர்கள் என பல்வேறு தரப்பிடம் இருந்து அவர் பல கோடி ரூபாய்களை மோசடி செய்தமை தெரியவந்ததை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் அவர் பல வருடங்களுக்கு முன்னர் சாதாரண நபர்களிடமும் மோசடிகளை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வருடங்களுக்கு முன்னர் அவர் அல்டோ வகை மகிழுந்து ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அதன் உரிமையாளருக்கு போலியான காசோலை ஒன்றை வழங்கியமையே அவரது முதலாவது மோசடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும் இந்த விடயம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரையில் உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படவில்லை.