ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கந்தவல தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு போதியளவு சுதந்திரம் வழங்கினால் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ள சர்வதேச உதவியை நாடவுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.