பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்தானியாவை வழிநடத்தினார் என்று கூறியுள்ளார்.
100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை தேர்தலில் மூன்றாம் இடம் பிடித்த பென்னி மார்டன்ட், இன்று 100 நாட்கள் ஆதரவைப் பெறாவிட்டால், ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 357 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், ரிஷி சுனக் தனக்கு 128 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறை லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த வர்த்தக அமைச்சர் கெமி படேநோச், பாதுகாப்பு அமைச்சர் டாம் டுஜென்தத் உள்ளிட்ட சில அமைச்சர்கள் இந்த முறை ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால் முதலில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு வாக்களித்து இறுதியாக இரண்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர். இறுதிச் சுற்றில் கட்சியின் 1.70 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தப் பணி நிறைவு பெறும்.
ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டால் அவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் இன்று அறிவிக்கப்படுவார்.