கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50 கோடியாக 150 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சூதாட்ட விடுதிக்கான வருடாந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேமிங் மற்றும் சூதாட்ட வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக்க நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மற்ற பந்தயம் மற்றும் விளையாட்டுகளுக்கான வரிகள் குறைந்தபட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேரடி பந்தய மையங்களுக்கு,
1. ஆண்டு வரியை 6 லட்சத்தில் இருந்து குறைந்தது 10 லட்சமாக உயர்த்துதல்.
2. 10% விற்றுமுதல் வரியை குறைந்தபட்சம் 15% ஆக உயர்த்துதல்.
* பந்தய துணை முகவர்களுக்கான வருடாந்த வரி 4 மில்லியன் ரூபாயிலிருந்து குறைந்தது 5 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு.
*நேரடி அல்லாத பந்தய சந்தைகளுக்கு ஆண்டு வரி 50,000ல் இருந்து 75,000 ரூபாயாக உயர்வு.
இவை அனைத்திற்கும் பிறகு, அந்த வணிகங்களின் வருமானம் அல்லது லாபத்தின் மீது 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
இது தவிர, மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகள் பின்வருமாறு.
* மதுபான போத்தலுக்கு குறைந்தபட்சம் 75% வரி விதிக்கப்படுகிறது.
*சிகரெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 85% வரி விதிக்கப்பட்டுள்ளது.
*இறுதியில், அந்த நிறுவனங்களின் லாபத்தில் இருந்து 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
அதற்கான வரிகள் போன்றவற்றை உயர்த்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.