அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசியல் விருப்பமும் வலுவான நடவடிக்கைகளும் அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் நேற்று நாட்டை வந்தடைந்தார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கப் பிரதிநிதிகளையும் பொருளாதாரத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி செல்லும் வழியை மையமாகக் கொண்டு அவர்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.