ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 30 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசாங்கத்தின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, “தமிழ் மொழிக்கு ஒரு வரலாற்று நெருக்கடி எழுந்திருக்கிறது. தமிழ் மொழிக்கு இது ஒன்றும் புதியதில்லை.
தமிழை மதத்தால், அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள் இப்போது சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.
இப்போது திணிக்கப்படும் ஹிந்தி மொழி வேறு வடிவம் கொண்டிருக்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக 1965ல் எழுந்த எழுச்சியை விட 2022ல் தமிழர்கள் கூடுதல் உணர்ச்சி பெற வேண்டும்.
ஹிந்தி தெரியாதவர்கள் மத்திய அரசாங்கத்தின் பணிகளில் இடம் பெற முடியாது என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.“ எனத் தெரிவித்துள்ளார்.