தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார்.
இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜெயலட்சுமி – சினேகன் இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார்.
இந்நிலையில், சினேகன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.