ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்து எழுவோம் பேரணியின் மூன்றாவது பேரணி இன்று (வியாழக்கிழமை) ஆராச்சிக்கட்டில் ஆரம்பமானது.
‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு முன்பாக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பேரணியில் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த, ஜானக வக்கம்புர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.