குழந்தைகள் ஐந்து வயதை கடக்கும் வரை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குழந்தை கதைப்பதற்கேனும் முடியாத பருவத்தில் அவர்களை தனித்துவிட்டு தாய் வெளிநாட்டுக்குச் செல்வதானது குழந்தைகளுக்கு தாய்மார்கள் இழைக்கும் பாரிய தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குழந்தைகள் உறவினர்களாலேயே அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் என்பதனை அனைத்து தாய்மார்களும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்காக எமது குழந்தைகளை எம்மால் காட்டிக்கொடுக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குழந்தையொன்று இரண்டு வயதினை கடந்திருந்தால் அந்த குழந்தையின் தாய் வெளிநாடொன்றுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்ல முடியும் என்ற விதிமுறை இதுவரை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.