போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் அமைச்சரின் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். அது தொடர்பான அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும்.
மேலும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.