உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போரைக் சீனா கண்டிக்க மறுப்பது குறித்து அமெரிக்கா என்ன கருதுகிறது என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், சீன ஜனாதிபதியின் இந்த சமரச கருத்து வந்துள்ளது.
சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தாய்வானில் ‘வெளிநாட்டு தலையீடு’ என்று கூறியதைக் கண்டித்துள்ளார், மேலும் தாய்வானை பிரதான நிலப்பரப்புடன் இணைக்க பலத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையை சீனா ஒருபோதும் கைவிடாது என்று கூறினார்.
நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பிற்கான தனது செய்தியில், ‘பெரிய சக்திகளாக, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் உறுதியை அதிகரிக்கவும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என கூறினார்.
‘பரஸ்பர மரியாதை அளிக்கவும், அமைதியாக இணைந்து வாழவும் மற்றும் புதிய சகாப்தத்தில் பழகுவதற்கான வழிகளைக் கண்டறியவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது’ என்று அவர் மேலும் கூறினார்.