கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் இன்று (வியாழக்கிழமை) மன்னாரில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நாடளாவிய ரீதியில் காணப்படும் எண்ணைக்கசிவு தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பாகவும் அதே நேரம் எண்ணை கசிவு ஆபத்து ஏற்படும் போது சூழல் ரீதியாகவும், கடல் சார்ந்து ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்கமைய இந்த செயற்திட்டமானது 14 மாவட்டங்களில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கடற்படையினர், விமானப்படையினர், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.