ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 சுற்றின் குழு-2இல் நடைபெற்ற தொடரின் 17ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 104 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றறுள்ளது.
சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணியும் பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீலே ரொஸ்சவ் 109 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகில் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் அபீப் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 16.3 ஓவர்களுக்கு 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி 104 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 34 ஓட்டங்களையும் சௌமியா சர்கார் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோக்கியா 4 விக்கெட்டுகளையும் சம்ஸி 3 விக்கெட்டுகளையும் ரபாடா மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்ரிகள் அடங்களாக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரீலே ரொஸ்சவ் தெரிவுசெய்யப்பட்டார்.