மன்னாரில் அதிகரித்து வரும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் கையாள்வது தொடர்பான கருத்தமர்வொன்று நடைபெற்றது.
இந்த கருத்தமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறுவர் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளை தடுப்பது மற்றும் சிறுவர் பெண்களுக்கு ஏற்படும் வன்முறை சம்பவங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான கருத்துக்கள் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மெசிடோ நிறுவனத்திற்கான யுனெப்ஸ் திட்ட இணைப்பாளர் ஜான்சன் சூசை, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.