ஆண்களுக்கான சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடர், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினின் ரொபர்டோ பாட்டிஸ்டா அகுட், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதன்படி, முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரொபர்டோ பாட்டிஸ்டா அகுட், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், ரொபர்டோ பாட்டிஸ்டா அகுட், 7-5, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், சகநாட்டு வீரரான பாப்லோ கரேனோ புஸ்டாவுடன் மோதினார்.
இப்போட்டியில், கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
இன்னொரு காலிறுதியில், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், கஸகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் போட்டியிட்டார்.
இப்போட்டியில், பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.