மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து “விழிப்புணர்வு குழுக்களை” அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்தார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா மாவட்டக் குழு பொலிஸாருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதேவேளை பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழு உருவாக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதால் பாடசாலைகளைச் சுற்றி சோதனைகளை நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.