நீர்மூழ்கிக் கப்பல் சேவையில் பெண்களுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு, றோயல் கடற்படைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கடற்படையில் பணியாற்றிய பல விசில்ப்ளோயர்கள் டெய்லி மெயில் ஊடகத்திடம், தாங்கள் அனைத்து தரப்பிலிருந்தும் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறியதையடுத்து, இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் கடல் பிரபு அட்ம் சர் பென் கே, ‘வெறுக்கத்தக்க’ கூற்றுகளால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் இந்த நடத்தைக்கு றோயல் கடற்படையில் இடமில்லை, யாரேனும் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால் அவர்கள் பொறுப்புக் கூறப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
ஒரு பெண், தான் தூங்கும் போது உயர் பதவியில் உள்ள ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக டெய்லி மெயிலிடம் தெரிவித்தார். மூத்த அதிகாரி ஒருவர் தனது பிறபப்புருப்பில் குத்தியதாக அவர் கூறினார்.
மற்றொருவர், ஒரு அதிகாரி, மொடல்களின் நிர்வாணப் படங்களை அனுப்பி, 50 பென்ஸ் நாணயங்களை தனது அறையில் கொடுத்து பாலியல் செயலைச் செய்ய கூறியதாக குற்றம் சாட்டினார்.
மற்ற பெண்கள், தாங்கள் அடிக்கடி பாலியல் செயல்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அடிக்கடி கத்தி மற்றும் கிளிப்போர்ட்கள் மற்றும் பேனாக்களால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக துஷ்பிரயோகம் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.