ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனி குழுவை அமைப்பதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தனியான குழுவாக கூட்டணி அமைக்கும் நோக்கில் அவர்கள் தயாராகி வருவதாகவும் அறியமுடிகிறது.
டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான குழுவினர் தற்போது தனியான குழுக்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.