ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால், உக்ரைன் தலைநகர் கீவ்வில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உள்ள முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால், தலைநகர் கீவ்வில் சதவீத நுகர்வோர் தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும், 270,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்றும் நகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார்.
மேலும், நாடு தழுவிய தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இராணுவக் கட்டுப்பாடு மற்றும் எரிசக்தி அமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அனைத்து இலக்குகளும் தாக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியது.
வார இறுதியில் ரஷ்ய போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு அவை ஓரளவு பதிலடியாக இருந்தன என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.
ஏவப்பட்ட 55 ஏவுகணைகளில் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.