நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
நேற்று(புதன்கிழமை) மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது இவ்வீதியில் ஒருமருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இரவு வேளையில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றன.
இதனால் மண்மேடுகளுக்கும் மலைகளுக்கு அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.