ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை மார்ச் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து, கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயனா கமகே தனது மனுவில் தெரிவித்துள்ளார்.