ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன மற்றும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.