சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்த்த கடன் தொகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் பெற்றுக்கொள்ள முடியாது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் குழப்பும் என பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்களை சீனா தொடங்காததே இந்த கடன் தொகையை பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று அந்தச் செய்தியில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த மாதம் 2.9 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பின்னணியில், உரிய கடன் தொகையைப் பெற அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் நாட்டில் கடன் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜப்பானும் இந்தியாவும் ஏற்கனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்களை ஆரம்பித்துள்ளன.