ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் இறுதிப் போட்டிகளில், வெற்றிபெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தன. தென்னாபிரிக்கா அணி, நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
முதல் போட்டியாக நடைபெற்ற தொடரின் 40ஆவது போட்டியில், தென்னாபிரிக்கா அணியும் நெதர்லாந்து அணியும் மோதின.
வெற்றிபெற்றால் அரையிறுதி என கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
அடிலெயட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியிருந்தாலும், தொடரிலிருந்து வெளியேறும் கட்டத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இப்போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் சிம்பாப்வே அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்று அரைறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.