2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காணலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும் இலங்கையில் பகுதி சந்திர கிரகணமாகவே இது காணப்படுவதாக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மதியம் 1:32 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ்கிறது என்றும் இதன் இறுதி பகுதியை பகுதி சந்திர கிரகணமாக பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரன் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் கிரகணத்தின் ஆரம்பம் தென்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று 5:48 மணிக்கு இலங்கைக்கு சந்திர உதயம் தெரியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 31 நிமிடங்கள் கிழக்கு அடிவானத்தைப் பார்த்தால் பகுதி சந்திர கிரகணத்தைக் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.