நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கோரும் தகவல்களை அரசாங்கம் வழங்குவதில்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச நிதியத்தின் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் அரசாங்கம் தனது பணிகளை தாமதப்படுத்தி வருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் இது முழு நாடாளுமன்றத்தையும் பாதிக்கும் பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.