எதிர்வரும் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான, வீரர்களின் ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதியினை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் கூடுதலாகத் தலா 5 கோடி ரூபாயைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களிடம் மீதமுள்ள தொகையுடன் இந்த 5 கோடி ரூபாயையும் சேர்த்துக்கொண்டு அணிகள் ஏலத்தில் பங்கேற்கும். 10 அணிகளில் பஞ்சாப் அணிக்குத்தான் அதிகபட்சமாக 3.45 கோடி 5 கோடி ரூபாய் மீதமுள்ளது.
லக்னௌ அணி முழு பணத்தையும் செலவு செய்துவிட்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிடம் 2.95 கோடி ரூபாய் மீதமுள்ளது. நடப்பு சம்பியன் குஜராத்திடம் 15 லட்சமே மீதமுள்ளது.
இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், சேம் கரண், கேம்ரூன் கிரீன் ஆகிய வீரர்கள் பங்கேற்றால் அவர்களைத் தேர்வு செய்ய பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.