ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) இந்தோனேசியாவுக்குச் செல்லவுள்ளார்.
பாலியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜி 20 அமைப்புக்கு அடுத்த ஓராண்டுக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளதுடன், இதற்கான பொறுப்பு, மாநாட்டின்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் உரையாற்றுகையில், உணவு பாதுகாப்பு, கொரோனாவுக்குப் பின்னரான உலக பொருளாதார நிலை, உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.