ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கிறீன் பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் மற்றும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டெய்லர் ஃபிரிட்ஸ், 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.
ஆண்கள் பிரிவில் முன்னணி டென்னிஸ் வீரர்களுக்கிடையில் நடைபெறும் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர், இத்தாலியின் டுரின்- பாலா அல்பிடூரில் உள்ள உட்புற கடின தரையில் நடைபெற்று வருகின்றது.
எட்டு வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில், கிறீன் மற்றும் ரெட் என இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.