அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவது அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு உற்பட்டது அல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அண்மையில் நாடாளுமன்றம் தெரிவித்தது.
அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்காக, எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில் தனித்துவம் மிக்க மற்றும் நேர்மையான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 21 வது திருத்தம் அத்தகைய நியமனங்களை அனுமதிக்காது என்றும், அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரால் செய்யப்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் கூறினார்.