தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை தோல்வியடைச் செய்ய வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணைக்குழு இல்லாவிட்டால், தேர்தல் திணைக்களம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலகுவாக நடத்தியிருக்கும் என டிலான் பெரேரா தெரிவித்தார்.
சமன் ரத்னாநயக்க உள்ளிட்ட தேர்தல் திணைக்கள் அதிகாரிகளுக்கு, உள்ளுராட்சி தேர்தலை நடத்தும் அந்த அதிகாரத்தை எவரும் இல்லாது செய்யக்கூடாது என் கூறினார்.
மீறி, அவ்வாறு எவரேனும் செயற்படுவார்களாயின் நாம் நீதிமன்றின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.