துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார்.
யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வவுனியா மற்றும் மட்டக்களப்பில் உள்ள பல துயிலும் இல்லங்களை இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்றும் செல்வராஜா கஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.
மேலும், வடக்கு, கிழக்கு மக்கள் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து இம்மாதத்தை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும் என்றும் செல்வராஜா கஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.