ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் தற்போது சலுகைகளை நம்பியிருக்கும் ஏழை மக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) மூன்றாம் நாள் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமது வாழ்க்கையைச் சரியாக நிர்வகிக்க முடியாத குடிமக்கள் மீதே இந்தப் பழி சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இந்தப் பிரச்சினையை இவ்வாறான கண்ணோட்டத்தில் பார்ப்பதென்பது எவ்வளவு தீமையான விடயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.