வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்று (சனிக்கிழமை) வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக தாய்மார்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் எமக்குத்தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம் , அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து உதவி செய்து நேரடியாக வந்து இப்பிரச்சினையைத்தீர்த்து வைக்க வேண்டும் , வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி போராடி வருகின்றோம் என போராட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.