2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ள பல முன்மொழிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு கணனி வழங்கும் வேலைத்திட்டத்தை தாம் அரசாங்கத்தில் இருந்த போது நிறைவேற்ற முடியாத நிலை காணப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் ஜனாதிபதி என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க அதனை மீண்டும் நடைமுறைப் படுத்த முயற்சிப்பது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டார்.