எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணையை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை திங்கட்கிழமை அமைச்சரவைக்கு இந்த திருத்தம் வருகின்ற நிலையில் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு விலை அதிகரிக்கின்றதா அல்லது குறைகின்றதா என்பது குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் இந்த திருத்தம் வரும் மாதத்தில் இருந்து அமல்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.