சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டியதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டுவிட்டர் நீக்கியுள்ளது.
டுவிட்டர் தளத்தின் புதிய உரிமையாளரான எலன் மஸ்க், ட்ரம்ப்பைத் திரும்ப அனுமதிப்பதற்கான ஒரு வாக்கெடுப்பை நடத்தி அவரது தடையை நீக்கியுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த நிலையில் அதில் டொனால்ட் ட்ரம்ப்க்கு சாதகமாக 51.8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன.
எவ்வாறாயினும் தனக்கு டுவிட்டர் தளத்திற்கு மீண்டும் வருவதற்கு விருப்பம் இல்லை என டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் தளத்தை டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்தாவிட்டால் எலன் மஸ்க்கிற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.