மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இல்லை என ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ குற்றம் சாட்டியுள்ளார்.
கட்டார் தலைநகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கட்டாரை நோக்கி விரல் நீட்டும் முன் ஐரோப்பா தனது கடந்த கால குற்றங்களை கவனிக்க வேண்டும் என்றார்.
கடந்த 3,000 ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் செய்த வேலைகளுக்கு அடுத்த 3,000 ஆண்டுகளுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஃபிஃபா தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் மத்திய கிழக்கு நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்றாலும் அனைத்து ரசிகர்களும் நிகழ்வில் கலந்து கொள்ள கட்டார் அனுமதி வழங்கியமையை அவர் வரவேற்றுள்ளார்.
உலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்த 2010 ஆம் ஆண்டு உரிமையை பெற்ற கட்டார், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
FIFA President Gianni Infantino has accused Western critics of hypocrisy at a media briefing a day before the World Cup kicks off in Qatar 👇 pic.twitter.com/AaN9QOISFn
— Al Jazeera English (@AJEnglish) November 19, 2022