யாழ் .பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்..மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிபுரையின் கீழ் பொது மக்களின் பங்கேற்புடன் இந்த வேலை திட்டம் ஆரம்பமானது.
குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தில் கொட்டடி பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ,இராணுவம், பொலிசார் மற்றும் யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.