“1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.
இசையமைப்பாளர் தேவா சமூக வலைத்தளங்களில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதில், வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார். தேவாவின் பிறந்தநாளான நேற்று அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளதால் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.
Vanakkam!
I'm officially on Twitter, Instagram and Facebook.
Thank you for the love and support.
Nandri! 🎼😊🙏🏼@RIAZtheboss@V4umedia_ pic.twitter.com/eg8269Rhs5— 'Thenisai Thendral' Deva (@ungaldevaoffl) November 20, 2022