கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபை செலுத்தாமையால் இந்த நிலை ஏற்படும் அபாயமுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு நகரில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் தொடர்பான கட்டணங்கள் சுமார் 5 மாதங்களாக செலுத்தப்படவில்லை என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.
இத்தொகையை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பல தடவைகள் அறிவித்தும் இது தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையினால் போக்குவரத்து விளக்குகள் மற்றும் தெருவிளக்குகள் துண்டிக்கப்பட்டால், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.