• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட்

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட்

shagan by shagan
2022/11/21
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.

மற்றொருபுரம் ஆம்ஆத்மி தொண்டர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள மஹுவாவில் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பொதுமக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும். மோர்பி பாலம் விபத்து சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. குஜராத்தில் கள்ளச் சாராயத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை இனி பலிக்காது.

இந்த முறை ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும். மோடியும், அமித்ஷாவும் வாரந்தோறும் குஜராத்திற்கு வந்தால் என்ன அர்த்தம்? அவர்களின் பலவீனமான நிலையை அது காட்டுகிறது.

அதனால் இருவரும் இங்கு முகாமிட்டுள்ளனர். ராகுல் காந்தி, பாத யாத்திரைக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இதுவரை இங்கு வரவில்லை, ஆனால் அவர் எழுப்பும் பிரச்சினைகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும்.

இமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி திடீரென வாபஸ் பெற்றது குறித்து கேஜ்ரிவாலைக் கேட்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் யாருக்குத் தெரியும்? அவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்கிறார்களா? அவர்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தோனேசியா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக அதிகரிப்பு- 700 பேர் காயம்! (UPDATE🔴)

Next Post

கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம்!

Related Posts

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

2026-05-08
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
இந்தியா

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?
இந்தியா

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

2026-05-08
Next Post
கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம்!

கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம்!

இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

0
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

2026-05-08

Recent News

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.