மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கவுள்ளார்.
மாபெரும் வேலை வாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டமாகும்.
ரோஸ்கர் மேளா என்னும் இந்த திட்டத்தில், வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவதும், தேசிய வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் திட்டமாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒக்டோபர் மாதம், நடந்த மாபெரும்வேலை வாய்ப்புவிழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.