பாஜக கட்சி பொறுப்பில் இருந்து 6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் கட்சி தொடர்பாக எந்தவித உரையாடலையும் நடத்த வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.