நாட்டில் அரசாங்கத்தை மாற்றும் இன்னொரு போராட்டத்திற்கு (அறகலய) இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இராணுவம் மற்றும் ஆயுதப் படைகள் குவிக்கப்படும் எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் எனவும் அவர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் எச்சரித்தார்.
அனுமதியின்றி மற்றொரு (அறகலய) போராட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் தடுக்கப்படும் என்றும் அவ்வாறான போராட்டங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமக்கு விருப்பமான பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு பொலிஸ் அனுமதிப் பத்திரம் கட்டாயம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
பல மதத் தலைவர்கள் போராட்டங்களை வெளிப்படையாகக் கண்டித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சில குழுக்களால் அவ்வாறான மதத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செய்திகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
வன்முறையை தூண்டும் போராட்டங்களை ஊடகங்கள் ஊக்குவிப்பதை கண்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.