இந்த வாரம் நாட்டில் பாரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், ஆறு மில்லியன் உக்ரைனிய குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) தனது இரவு உரையில், புதன்கிழமை முதல் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் குளிர்காலம் தொடங்கும் போது மில்லியன் கணக்கான மக்கள் ஒளி, தண்ணீர் அல்லது வெப்பம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தாக்குதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நகரத்தில் வசிக்கும் பலர் 20 அல்லது 30 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று அவர் கூறினார்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகள் தெற்கில் ஒடேசா, மேற்கில் எல்விவ், அதே போல் வின்னிட்சியா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஆகியவை மையமாக உள்ளன.
இதனிடையே, எட்டு மாத ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யா இரண்டு வாரங்களுக்கு முன்பு நகரத்திலிருந்து வெளியேறியதில் இருந்து உக்ரைனிய நகரமான கெர்சன், இரண்டாவது நாளாக ஷெல் தாக்குதல்களை எதிர்கொண்டது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கெர்சன் மீது ரஷ்யா துருப்புக்கள் நடத்திய தாக்குல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உக்Nரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.