இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு நடைபெறவுள்ள ஜி-20 கூட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தும் வகையில், டெல்லியில் அடுத்தமாதம் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உலகத் தலைவா்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.அதற்கு முன்பாக, நாடு முழுவதும் சுமாா் 200 கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை தெரியப்படுத்தும் வகையில், எதிர்வரும் 5 ஆம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்க சுமார் 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.